டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு: கலந்தாய்வு தேதி மற்றும் ரேங்க் பட்டியல் வெளியீடு:
குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டோர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரின் மதிப்பெண்களையும் ரேங்கையும் எல்லோரும் பார்க்கும் வசதியை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முதல் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளது.
![]() |
| tnpsc coaching in chennai |
இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
TNPSC Group 2 குரூப்-2 தேர்வு :
நேர்முகத்தேர்வுடன் கூடிய குரூப்-2 தேர்வுக்கு முதலில் முதல் நிலை தேர்வும், 2014-ம் வருடம் நவம்பர் மாதம் 8, 9 தேதிகளில் மெயின்தேர்வும் நடத்தப்பட்டது. அதில் எடுத்த மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் கடந்த ஜூலை 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வில் எடுத்த மதிப்பெண் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
1136 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரிகளை தேர்ந்து எடுப்பதற்காக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுக்கு 2 ஆயிரத்து 222 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அனைவரது மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
| tnpsc study center in chennai |
பட்டதாரிகளின் தரவரிசை பட்டியல் :
இதுவரை தேர்வு எழுதிய பட்டதாரி ஒவ்வொருவரும் அவர்களின் பதிவு எண்ணை இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) பதிவு செய்தால் அவருக்கு அவரது மதிப்பெண் தெரியும். ஆனால் வெளிப்படைத்தன்மைக்காக 2 ஆயிரத்து 222 பட்டதாரிகளின் தரவரிசை பட்டியல் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை அனைவரும் பார்க்கும் வகையில் முதல் முதலாக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை முதல் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளோம்.
TNPSC Group 2 கலந்தாய்வு:
கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் செப்டம்பர் 1-ந்தேதி வரை நடக்க உள்ளது. 1,136 பணியிடங்களுக்கு 2222 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


No comments:
Post a Comment